சமந்தாவுக்கு பதிலளித்த நாக சைதன்யா : முடிவுக்கு வந்ததா சர்ச்சை ?

நாக சைதன்யா தற்போது சாய் பல்லவியுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் திங்கள்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படத்தின் முன்னோட்டத்தை நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் பகிர்ந்த சமந்தா, சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஒரு சில ரசிகர்கள் ஏன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்? இன்னும் ஒருசிலர் ஒரு படி மேலே போய் நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெறப்போவதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் சமந்தா அதற்கு பதிலளிக்கவில்லை. இதனையடுத்து சமந்தாவுக்கு நாக சைதன்யா நன்றி தெரிவித்தார். முன்னதாக இருவரும் விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் சமூக வலைதளங்களில் சகஜமாக பேசிக்கொள்வது ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் அவர்களிடமே நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்