“சமந்தா மகிழ்ச்சியாக இருக்கிறார்” - விவகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த நடிகர் நாக சைதன்யா

சமந்தாவை பிரியும் முடிவு பரஸ்பர நலன் கருதியே எடுக்கப்பட்ட முடிவு என நடிகர் நாக சைதன்யா கூறினார்.

நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்.

திருமணத்துக்கு பிறகு சமந்தா கவர்ச்சியாக நடித்தது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வந்த நாக சைதன்யா தற்போது பொதுமேடையில் இது குறித்து பேசி உள்ளார்.

நாக சைதன்யா தனது சமீபத்திய படமான 'பங்கர்ராஜூ' படத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது கூறுகையில்,“பரஸ்பர நலன் கருதியே எனது மனைவி சமந்தாவை விட்டு பிரியும் முடிவு எடுக்கப்பட்டது.

அந்த கடினமான காலங்களில் எனது முழு குடும்பமும் எனக்கு ஆதரவாக நின்றது. இது எங்கள் இருவரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் நன்றாக இருக்கிறோம். தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கிறோம்” என கூறினார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்