ஸ்ருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பிய நாகசைதன்யா? - வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதி ஹாசனை திருமணம் செய்ய நாக சைதன்யா விரும்பினார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகசைதன்யா - சமந்தா தம்பதியினர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதி ஹாசனை காதலித்தார் நாக சைதன்யா என்றும், அவரை திருமணம் செய்ய விரும்பினார் என்றும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2013ம் ஆண்டு நாக சைதன்யாவும், ஸ்ருதியும் சந்தித்த நிலையில் முதலில் நட்பாக இருந்த அவர்கள் பின்னர் காதலர்கள் ஆனதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ருதியை திருமணம் செய்ய நாக சைதன்யா விரும்பினாராம்.

ஆனால் நடுவில் ஏற்பட்ட  பிரச்சனை காரணமாக ஸ்ருதியை விட்டு நாகசைதன்யா பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகே சமந்தாவை காதலித்து மணந்தார் சமந்தா என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

இந்த தகவல் சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்