விவாகரத்துக்கு பின்பு பிரபல நடிகையோடு ஒரே ஹோட்டலில் நாகசைதன்யா - வைரலாகும் புகைப்படம்
விவாகரத்துக்கு பின்பு பிரபல நடிகையுடன் நாகசைதன்யா டேட்டிங் சென்றுள்ளதாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா நாகசைதன்யா
சமந்த நாக சைதன்யா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் , நான்கு வருடங்கள் சிறந்த ஜோடிகளாக இருந்தனர்.
விவகாரத்து
இந்த நிலையில் திடீரென இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்தனர் , ஆனால் இருவரும் சில மாதங்களில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடக்கவில்லை இந்த நிலையில்தான் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியானது.அதே சமயம் நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிநாடு சென்று டேட் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
புகைப்படத்தால் பரபரப்பு
இந்த சூழ்நிலையில் தற்போது லண்டனில் இருக்கும் ஒரு பிரபல பாரில் சோபிதாவுடன் நாகசைதன்யா டின்னர் முடித்துவிட்டு எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போகின்றார் என பலரும் விமர்சனம் செய்த நிலையில்
இது படத்திற்காக எடுக்கப்பட புகைப்படம் என்று நாகசைதன்யா தரப்பில் கூறியுள்ளனர், மேலும் அது பழைய புகைப்படம் என்றும் கூறியுள்ளனர்.