சமந்தா - நாக சைதான்யா பிரிவு விவாகரம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜுனா

Naga Chaitanya Divorce Nagarjuna Samantha Ruth Prabhu
3 மாதங்கள் முன்

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான வதந்திக்கு நடிகர் நாகார்ஜுனா முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நாட்களில், நாக சைதன்யா அளித்த பேட்டியில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார்.

அதன்பின் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கினார். இதைவைத்து இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து விவாகரத்து முடிவை முதலில் எடுத்தது சமந்தா என்றும் அதன் பிறகு நாக சைதன்யா ஒத்துக் கொண்டதாகவும் நாகார்ஜுனா கூறியதாக செய்திகள் வெளியானது.

இது போலியான செய்தி என்று தற்போது நாகார்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.