மருத்துவமனைக்கு வந்த நாகசைதன்யா.... - ஓடி வந்து கட்டிப்பிடித்த சமந்தா? - தீயாய் பரவும் பரபரப்பு தகவல்..!

Samantha Naga Chaitanya
By Nandhini Nov 03, 2022 09:54 AM GMT
Report

சமந்தாவைப் பார்க்க மருத்துவமனைக்கு முன்னாள் கணவர் நாகசைதன்யா வந்ததாகவும், அவரைப் பார்த்ததும் ஓடி வந்து சமந்தா கட்டிப்பிடித்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா

நடிகை சமந்தாவின் யசோதா டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

naga-chaitanya-samantha-hospital

மருத்துவக்கு வந்த மாஜி கணவர்? பரபரப்பு தகவல்

இந்நிலையில், தன் முன்னாள் மனைவி சமந்தாவை பார்க்க நாக சைதன்யா மருத்துவமனைக்கு சென்றதாக தற்போது தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

மருத்துவமனைக்கு நாக சைதன்யா சமந்தாவைப் பார்க்க சென்றுள்ளார். அவரைப் பார்த்ததும் ஓடி வந்து சமந்தார் கட்டியணைத்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இத்தகவல் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது.

சமந்தாவை பார்க்க நாக சைதன்யா செல்லவில்லையாம். சமந்தாவும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளாராம். ஆனால், சமந்தாவை நேரில் சந்திக்க அவரின் முன்னாள் மாமனரான நடிகர் நாகர்ஜுனா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தகவலை நாகர்ஜுனா உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் சமந்தா, நாக சைதன்யா சந்திப்பு நடந்ததாக தெலுங்கு ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.