2வது திருமணம் செய்த நாக சைதன்யா - ஜீவனாம்சம் கேட்கும் சமந்தா?
நாக சைதன்யாவிடம் சமந்தா ஜீவனாம்சம் கேட்டதாக தகவல் பரவி வருகிறது.
ஜீவனாம்சம்
நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேருமே பரஸ்பர புரிதலோடு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தொடர்ந்து மையோசிடிஸ் நோய் பாதிப்பால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். பின் சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.
சமந்தா மறுப்பு
ஆனால் அந்த இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'சிட்டாடெல்' என்ற தொடரில் வருண் தவான் உடன் இணைந்து நடித்திருந்தார். இதற்கிடையில் நாக சைதன்யாவும் ஷோபிதாவும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நாக சைதன்யா, சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ. 200 கோடி வழங்கியதாகவும், இதனை சமந்தா மறுத்ததாகவும் தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால் இந்த தகவலின் உண்மைத் தன்மை எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.