2வது திருமணதிற்கு ரெடியான நாக சைதன்யா; இன்று நிச்சயதார்த்தம்? பொண்ணு பிரபல நடிகை!
நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.
நிச்சயதார்த்தம்?
திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நாகார்ஜுனின் மகனான இவர், தமிழிலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதனிடையே நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா டேட்டிங் செய்து வருவதாக நீண்ட நாட்களாக வதந்திகள் பரவி வருகிறது.
இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் செய்திகள் வலம் வந்தது. ஆனால் நாக சைதன்யாவும், ஷோபிதாவும் இந்த வதந்திகளுக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து இது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இருவரும் மௌனம் சாதித்து வந்தனர்.
2வது திருமணம்
இந்த நிலையில், நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபலாவுக்கும் இன்று (ஆகஸ்டு 8) அவர்களது இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் பற்றி இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
ஏனினும் மாலைகுள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. முன்னதாக நடிகை சமந்தாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக முடிவெடுத்து விவாகரத்து பெற்றுகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
