உலக மருந்தகமாக திகழ்கிறது இந்தியா- தஞ்சையில் ஜேபி நட்டா பேச்சு

india pharmacy nadda Thanjavur
By Jon Mar 27, 2021 12:35 PM GMT
Report

72 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் உலக மருந்தகமாக இந்திய திகழ்கிறது என தஞ்சையில் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். பூதலூர் பகுதியில் திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர்க்ள் கிஷன் ரெட்டி, வீகே சிங் ஆகியோர் பங்கேற்றனர். ஜேபி நட்டா விற்க்கு வெள்ளி வாள் பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி, தமிழ் மொழியின் தமிழ் இலக்கியங்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கு உண்டானதாகும்.

காங்கிரஸ் திமுக தமிழர்களால் முழுமையாக தோற்கடிக்க வேண்டும், இந்த இரண்டு கட்சிகளும் மன்னராட்சி போல வாரிசுகளை கொண்ட கட்சியாக உள்ளது.

உலக மருந்தகமாக திகழ்கிறது இந்தியா- தஞ்சையில் ஜேபி நட்டா பேச்சு | Nadda Talk India Thanjavur Global Pharmacy

இந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் ஆட்சி கொண்டு வரவேண்டும். திமுக காங்கிரஸ் காட்சிகள் இரண்டு தலைமுறை மூன்று தலைமுறை நான்கு தலைமுறை ஊழல் என கொண்டுள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத புறக்கணிக்கக் கூடிய கட்சிகள், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழர்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு குறைந்த அளவிலான தொகையை ஒதுக்கியது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

உலக மருந்தகமாக திகழ்கிறது இந்தியா- தஞ்சையில் ஜேபி நட்டா பேச்சு | Nadda Talk India Thanjavur Global Pharmacy

தமிழகத்திற்கு பதினொரு மருத்துவக் கல்லூரிகளை ஒதுக்கியதோடு 12 ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சிக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு குழு கட்டமைப்பிற்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி என்பது இரண்டும் தேசிய கூட்டணியாக இணைந்து உள்ளது.

அதிமுக பாஜக அரசு இணைந்து செயல்படுவதினால் உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 72 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து உலகத்தின் மருந்தகம் ஆக இந்திய மாறியுள்ளது. தமிழகத்தில் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் பாஜக வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பேசினார்.


Gallery