ஜே.பி.நட்டா வருகை ரத்து ஏன்? அதிருப்தியில் உள்ளதாக அதிமுக - பாஜக கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றது. தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் முடிவில் பிரதான கட்சிகள் இருந்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இழுபறியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக வருகையும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக - பாஜக கூட்டணியில் நிலவி வரும் அதிருப்தியே காரணமாகச் சொல்லப்படுகிறது.
சட்டமன்ற தொகுதிகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளுக்குமான உத்தேச பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியானது. மேலும் அதிமுகவின் வலுவான தொகுதிகளையும் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளையும் பாஜக கேட்டு வருவதாக தெரிகிறது.
இதனால் அதிமுகவும் அதிருப்தியில் உள்ளது. அதனால் தான் ஜே.பி.நட்டாவின் வருகையும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.