ஆஸ்கரை தட்டிச் சென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் - ரசிகர்கள் குதூகலம்
நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
நாட்டு நாட்டு பாடல்
95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது. அதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் போட்டியிட்டது.

இந்நிலையில் சிறந்த பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர்.
ஆஸ்கர்
முன்னணி இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது.
தெலுங்குப் படம் ஒன்று ஆஸ்கர் விருதை வென்றது இதுவே முதல் முறை.
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் IBC Tamil
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil