Hi Guys... முதலமைச்சருடன் நான் உங்கள் தேவா சிறுவர்கள்
சமூகவலைத்தளங்களை கலக்கும் சிறுவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் தேவா என விளையாட்டாக வெளியான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலானது.
இன்று அவர்கள் வெளியிட்ட வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது, ஏனெனில் அவர்கள் சந்தித்தது முதலமைச்சர் முக ஸ்டாலினை.
best video in recent times #talkwithdeva #MKStalin
— mr.nobody🀄️ (@gotnochills007) March 14, 2026
pic.twitter.com/Pz44eLCYVb
ஹாய் காய்ஸ், நான் உங்கள் தேவா என்று தொடங்கும் வீடியோவில், சொன்னா நம்ப மாட்டீங்க.. சிஎம் சாரை பார்க்க வந்திருக்கோம் என்று கூறி, தலைமை செயலகம் அலுவகத்தில் உள்ள முதலமைச்சர் அறை இருக்கும் இடத்தை காண்பிக்கன்றனர்.
தொடர்ந்து, சிஎம் சார் நம்முடன் இருக்கிறார்.. சிஎம். சார் சொன்னா நிறைய பேர் கேட்பீங்க.. சார் உங்களுக்கு தெரிந்த அட்வைஸ் சொல்லுங்க என்று கேட்க
அதற்கு, ரீல்ஸ் நல்லா போடுறீங்க தம்பி...அதுவே வேலையாக இருந்திடாம படிப்புல கவனம் செலுத்தாம இருந்திடக் கூடாது.
அதேபோல படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.. உங்களுடைய குறிக்கோளை அடைய கவனமுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேஎண்டும் என்று கூறுகிறார்.