Hi Guys... முதலமைச்சருடன் நான் உங்கள் தேவா சிறுவர்கள்
மழலை மொழியில் பேசி சமூக ஊடகங்களில் கலக்கும் சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் தேவா.. விளையாட்டாக வீடியோ எடுத்து இன்ஸ்டாலிரமில் போட அது பல ஆயிரம் வியூஸ் பெற்று மக்கள் மத்தியில், சிறுவர்கள் கவனம் ஈர்த்தவர்கள்.
அந்த வகையில், “ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… நான் உங்கள் தேவா. இது என்னுடைய தம்பி. இப்போது உங்களுக்காக ஒரு பாடல் பாடுவான்” என்று அந்த சிறுவர்கள் மழலை மொழியில் பேசும் விதம் பலரையும் கவர்ந்து வருகிறது.
இன்று ஹாய் காய்ஸ், நான் உங்கள் தேவா...என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
best video in recent times #talkwithdeva #MKStalin
— mr.nobody🀄️ (@gotnochills007) March 14, 2026
pic.twitter.com/Pz44eLCYVb
அந்த வீடியோவில், சொன்னா நம்ப மாட்டீங்க.. சிஎம் சாரை பார்க்க வந்திருக்கோம் என்று கூறி, தலைமை செயலகம் அலுவகத்தில் உள்ள முதலமைச்சர் அறை இருக்கும் இடத்தை கான்பித்தனர்.
பின்னர் அந்த வீடியோவில், ஹாய் காய்ஸ், நான் உங்கள் தேவா..இன்றைக்கு சிஎம் சார் நம்முடன் இருக்கிறார்.. சிஎம். சார் சொன்னா நிறைய பேர் கேட்பீங்க..சார் உங்களுக்கு தெரிந்த அட்வைஸ் சொல்லுங்க என்று கேட்க
அதற்கு, முதல்வர் ஸ்டாலின் ரீல்ஸ் நல்லா போடுறீங்க தம்பி...அதுவே வேலையாக இருந்திடாம படிப்புல கவனம் செலுத்தாம இருந்திடக் கூடாது.
அதேபோல படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்..உங்களுடைய குறிக்கோளை அடைய கவனமுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேஎண்டும் என்று கூறினார்.
தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.