நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றம்- அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

NEET
By Yashini Jun 21, 2026 10:53 AM GMT
Report

நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

அவர் பேசியதாவது..,

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தவெகவின் நிலைப்பாடு. இத்தனை ஆண்டுகளாகியும் மத்திய அரசால் நீட் தேர்வை சரியாக நடத்த முடியவில்லை.

நீட் வினாத்தாளை கூட அவர்களால் ஒழுங்காக சேர்க்க முடியவில்லை. தென் மாநிலங்களில் சிறப்பாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள்தான் இந்த தவறு நடக்கிறது.

சமீபத்தில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கும் பிரதமர் மோடி தான் பொறுப்பு. இனிமேலாவது நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றம்- அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் | Naan Mudhalvan Scheme Renamed Explains

மேலும், தமிழகத்தில் செயல்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மக்களுக்கு எளிதில் புரியாததால், அதை திறன் மேம்பாட்டு திட்டம் என்று மாற்றியுள்ளனர் என்றார்.

மேலும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல், திமுகவும் அதிமுகவும் இணைந்து தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம். தவெக ஆட்சியில் விஜய் மட்டுமே முக்கிய அதிகார மையமாக இருப்பார்.

முந்தைய அரசுகளின் தவறுகளால் தொழில் முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டன என்றும் தெரிவித்தார்.