'' ஹே தொலைச்சு புடுவேன் பார்த்துக்கோ'' : மேடையில் கொந்தளித்த சீமான் நடந்தது என்ன?

Naam tamilar kachchi Seeman
By Irumporai Jul 22, 2022 10:11 AM GMT
Report

செய்யாறு பிரம்மதேசம் கிராமத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையிலேயே கோபமாக சண்டை போட சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் பிறந்த நாளை நாம் தமிழர் கட்சி வெகுவாக கொண்டாடுவது வழக்கம். பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ராஜேந்திர சோழன் கோவில் உள்ளது. 

ராஜேந்திர சோழன்

இந்த நிலையில் நேற்று பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ராஜேந்திர சோழன் கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் சீமான், சோழர்கள் கட்டிய கோவில் என்பது நாம் வரலாற்று ஆவணம்.

இதெல்லாம் நாம் மேற்கொண்ட பெரு வாழ்விற்கான சாட்சியங்கள். இதை சாதாரண கோவில்களாக கருத வேண்டாம். நாம் வரலாற்று ரீதியாக எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்கள் இவை. நாம் இதை கண்டு பெருமை கொள்ள வேண்டும் என்று, சீமான் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் கூட்டத்திற்கு அருகில் இருந்த நாம் தமிழர் கட்சி கொடியை சிலர் இறக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் அங்கு இருந்த நாம் தமிழர் கட்சி வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சீமான் கோபம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அங்கு கூட்டம் தொடங்கும் முன் பறை அடித்து உள்ளனர். இதை அங்கு இருந்த இடைநிலை சாதியினர் சிலர் எதிர்த்ததாக கூறப்படுகிறது. பறை அடிக்க கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை மீறி பறை அடிக்கப்பட்டதால் கோபம் கொண்ட சிலர் நாம் தமிழர் கட்சி வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மேடையிலேயே கோபமாக கத்தினார்.

ஹே அடங்க மாட்டீங்களா? இங்க வர சொல்லு. யார் அவன் கொடியை இறக்குவது இங்க வர சொல்லு.. என்று கூறிவிட்டு கையை மடித்துக் கொண்டு சண்டைக்கு செல்வது போல சென்றார். அதோடு ஹே தொலைச்சு புடுவேன் பார்த்துக்கோ என்றார். 

அவரை நாம் தமிழர் நிர்வாகிகள் அமைதிப்படுத்தினர். பின்னர் பேசிய சீமான்.. நான் பறை அடிப்பது உனக்கு பிரச்சனையா? பறை நம்முடைய இசை. அதை அடிப்பேன்.

நான் பறை தானே அடித்தேன். உன்னை அடிக்க வில்லையே. நான் கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தால் நீ இப்படி பண்ணி இருப்பியா? நான் தனிச்சு நிற்கிறேன் வா. இது உன் கோட்டை என்றால்.. தமிழ்நாடே என் கோட்டை, என்று சீமான் ஆக்ரோஷமாக பேசினார்.