விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கம்!

Naam tamilar kachchi Tamil nadu Seeman Viluppuram
By Karthick Jun 26, 2024 04:26 PM GMT
Report

நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சி

தமிழகத்தை பொறுத்தவரையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி என்றால் அது, நாம் தமிழர் கட்சி தான். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் முக்கிய - ஒரே ஈர்ப்பு சக்தியாக திகழ்கிறார். அவரை பல இளைஞர்கள் பின்தொடர துவங்கிவிட்டார்கள்.

Naam tamilar seeman

சீமான் கூறும் தமிழ் தேசியம், தமிழ் இன அரசியல் தற்போதைய இளைஞர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

சின்னம் ஒதுக்கீடு 

நாட்டின் முக்கிய மாநிலத்தில் அனைத்து கட்சிகளுமே வாக்கு சதவீதத்தில் சற்று குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து வளர்ந்து வரும் கட்சியாகவே உள்ளது நாம் தமிழர். நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கூட்டணியின்றி போட்டியிடுகிறது.

naam tamilar symbols

அங்கீகாரம் பெற்ற கட்சி என்பதால் கேட்கும் சின்னத்தை ஒதுக்கவேண்டும். அப்படி தான் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தை கோர, அதனையே ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.