இது நடக்கவேண்டுமானால் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்: சீமான்
ஒவ்வொரு நாளும் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் மெகருன்னிஷாவை ஆதரித்து வாக்கு சேகரிக்கையில், கனிம வளங்கள் கொள்ளையடிக் கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து 6 ஆயிரம் மணிநேரம் பொதுமக்களுக்காக நான் பேசியிருக்கிறேன். ஆனால், பொதுமக்களுக்கு அது பழகிவிட்டது. அதிமுக அல்லது திமுக என மாறி மாறி வாக்களிக் கின்றனர். எனவே, நடைபெற உள்ள தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதிமுக, திமுகவுக்கு வாக்களிப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.
இதுவே மக்களுக்கு பழகிவிட்டது. இரண்டு கட்சிகளையும் விட்டு வெளியே வாருங்கள்.
பசி, பஞ்சமற்ற, ஊழல், லஞ்சமற்ற, கொலை, கொள்ளையற்ற, சாதி இழிவு, தீண்டாமையற்ற, மது, மத போதையற்ற, அடக்குமுறை, ஒடுக்குமுறையற்ற, பெண்ணிய ஒடுக்குமுறையற்ற, பாலியல் வன்கொடுமையற்ற தூய தேசம் படைக்க வேண்டுமானால் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.