சிங்கமாய் களத்தில் நிற்கிறோம்: சீமான்
கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, அடிமைத்தனமான, கேடுகெட்ட பண நாயகத்தை அழித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வந்திருக்கிறோம், எங்களுக்கு வருமானம் முக்கியமல்ல, தன்மானம் தான் முக்கியம்.
தமிழர்களின் நலத்தையும், வளத்தையும் பாதுகாப்பது எங்களுடைய கடமை, சிங்கம் போன்று களத்தில் தனியாக நின்று போராடும் எங்களுக்கு ஒருமுறை āதாருங்கள். தொலை நோக்கு பார்வையுடன் செயல்படும் நாம் தமிழர் கட்சியின் நோக்கம் எங்களுடைய இனம் வாழ வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இந்தியை திணிக்கிறது என போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இந்திக்காரர்களை திணித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.