‘‘மறுபடியும் இரட்டை இலைக்கோ உதயசூரியனுக்கோ ஓட்டு போட்டாள் குஷ்டம் தான் வரும்’’ : சீமான் கிண்டல்
மீண்டும் உதயசூரியன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் குஷ்டம் தான் வரும்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் சீமான், நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டார் அப்போது பேசிய அவர் தி.மு.க., - அ.தி.மு.க., இவ்விரு கட்சிகளும் தமிழகத்தை பாலைவனமாக மாற்றியதை தவிர, வேறு ஒன்றும் செய்யவில்லை.
உயிரைக் காக்கும் மருத்துவத்தை, தனியாருக்கு கொடுத்தவர்கள் இவர்கள்.ஆற்று மணலை அள்ளி விற்று, பல்லாயிரம் கோடிகளை குவித்து உள்ளனர் என பேசிய சீமான் .
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் பெண்களுக்கு எத்தனை தொகுதி கள் ஒதுக்கியுள்ளன என்பதை நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.
மறுபடியும் உதயசூரியன், இரட்டை இலைக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்கள் என்றால், உங்கள் கைக்கு குஷ்டம் தான் வரும். என சீமான் விமர்சன்ம் செய்துள்ளார்.