எனக்கு வாய்ப்பு கொடுத்தால் பிச்சை எடுத்தாவது உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வேன்: சீமான் பேச்சு
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, மநீம, அமமுக தலைமையிலான கூட்டணிகள் களமிறங்க உள்ளன. அதேநேரம், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்குகின்றன.
இதில், 234 தொகுதிகளுக்கும் சரிபாதியாக ஆண், பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருவொற்றியூரில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”எனக்கு வாய்ப்பளித்தால் பிச்சை எடுத்தாவது உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பேன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் முதல்வராகவோ, அமைச்சராகவோ ஆக முடியும் என்ற சட்டம் கொண்டு வருவேன்” என கூறியிருக்கிறார்.