கோவையில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய நாம் தமிழர் கட்சியினர்

seeman vote ntk Coimbatore
By Jon Mar 28, 2021 03:01 AM GMT
Report

கோவை டவுன்ஹால், இடையர் வீதி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் அப்துல் வகாப். கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் போட்டியிட்டு வருகின்றார், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்களிடத்தில் தீவிர வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியினரும் இன்று டவுன்ஹால், இடையர் வீதி, செட்டி வீதி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த பகுதிகளில் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் வாகன பிரச்சார வாகனத்தை, ரஜினி ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியின் வாகனம் இந்த பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது என தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புகார் அளித்த நாம் தமிழர் கட்சியினரின் புகாரின் அடிப்படையில், தகராறில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தெற்கு, தொகுதியின் வேட்பாளர் அப்துல் வகாப் தலைமையில் இன்று, மீண்டும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது, .

அனைத்து பொதுமக்கள் மத்தியிலும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை, மற்றும் கோட்பாடுகளை எடுத்துக்கூறிய அப்துல் வகாப், ஒருமுறையாவது தமிழை நேசிக்கும் மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கு வாக்குகளை அழித்து பாருங்கள், உங்களின் வாழ்க்கை எப்படி மாற்றம் அடையும் என்பதை ஐந்து ஆண்டுகளில் நீங்களே பாருங்கள் என கேட்டபடி, வாக்குகள் சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.