நாட்டு மக்கள் நன்றாக வாழ நாம் தமிழர் வென்றாக வேண்டும் - சீமான் பேச்சு

tamil people seeman win ntk
By Jon Mar 12, 2021 02:13 PM GMT
Report

நாடு மக்கள் நன்றாக வாழ நாம் தமிழர் வெல்ல வேண்டும் என ஆம்பூர் பரப்புரையில் சீமான் பேசியுள்ளார். சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பல்வேறு கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தற்போது தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆம்பூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஒரு காலம் வரும் அப்போது நேர்மையாக வாழ்வது என்பது உள்ளங்கையில் நெருப்பு போன்றது என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார். அந்த காலம் இந்த காலம் தான்,மேலும் ஊழல் லஞ்சத்தின் தேசியமையமாக்கப்பட்ட தேசத்தின் பில்லிங்களாக இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். லஞ்சம் பெறுபவர்களுக்கு சாபம் இருக்கும் என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த லஞ்சத்தை வாங்குபவர்களுக்கு வாக்களித்து அந்த சாபத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.

தற்போது அரசியல் மாற்றாக எளிய மக்களின் கட்சியாக நாம் தமிழர் கட்சி அமையும். இங்கு அத்தியாவசியமான கல்வி,மருத்துவம் தண்ணீர் அனைத்தும் வியபார பொருளாக மாற்றப்பட்டுவிட்டன. இவை நிகழ்ந்து வரும் நாடு நாடல்ல நரகம், அதனை மற்றும் முயற்சியில் தற்போது நாங்கள் இறங்கியுளோம்.

மேலும் கல்வி என்பது அனைவரது உரிமை அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம். அதுமட்டுமின்றி பணம் உள்ளவர் படித்து மருத்துவம் செய்து கொள்ளலாம் பணம் இல்லாதவன் படையில் படுத்து செல்லலாம் என தெரிவித்தார்.

இவை அனைத்தையும் சிந்தித்து பார்த்து எனது அருமை தோழி கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து எங்களை வெல்ல வையுங்கள். புதியதோர் புரட்சி செய்வோம் நமது தேசத்தை வளம் பெற செய்வோம். இவ்வாறு சீமான் தனது வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.