#NTKமக்களின்நம்பிக்கை - டுவிட்டரில் டிரெண்ட் செய்யும் சீமானின் தம்பிகள்
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி அதிமுக 92 இடங்களிலும், திமுக 139 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடந்து முடிந்த தேர்தல் என்பதால் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் டுவிட்டரில் தமிழக தேர்தல் பற்றிய விவாதம் காரசாரமாக நடக்கிறது. 'தி.மு.க., வெல்லும் என்றும்', 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' போன்ற ஹாஷ்டேகுகளும் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளன.
இதற்கிடையே #NTKமக்களின்நம்பிக்கை என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
சுமார் 17 ஆயிரம் பதிவுகளுடன் இந்திய டிரெண்டிங்கில் 22-ம் இடத்தில் உள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கையில் எந்த தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை பெறவில்லை.
சீமான் போட்டியிட்ட திருவொற்றியூரில் கூட அக்கட்சி பின்னடைவையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.