தெலுங்கில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற. கடந்த தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வில்லிவாக்கம் சட்டமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் அவர்கள் வீதி வீதியாக நடந்துசென்று பொதுமக்களிடம் கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
அயனாவரம் தாகூர் பகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் என்பதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தெலுங்கில் பேசி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
இந்த நிகழ்வின் போது நாம் தமிழர் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.