‘கச்சா பாதாம்’ பாட்டுக்கு மாஸா நடனமாடிய நடிகர் வடிவேலு - வைரலாகும் வீடியோ - ரசிகர்கள் குஷி
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் மகளாக விஜய் டிவி பிரபலம் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்திருக்கிறார்.
மேலும், இப்படத்தில் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
மாஸா நடனமாடிய நடிகர் வடிவேலு
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள வடிவேலுவின் கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாவ்... நம்ம தலைவர் வந்துட்டாரு.. வாங்க தலைவா... என்று பூரிப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர்.