'' HEY DOG I LIKE YOU ''- கலக்கலாக வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்`
கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைச்சுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் மோஷன் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் வடிவேலு நாய்களுடன் ஸ்டைலாக பைக்கில் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சந்தோசம் நாராயணன் இசையுடன் வெளியான இந்த மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.