முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
வயது முப்பால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் நேற்று காலமானார்.அயராத உழைப்பால் அனைவரது கவனத்தையும் பெற்றவர்.
தனது இலக்கிய நயத்தால் மேடைக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர். இந்நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெஹபூப்பாளையத்தில் உள்ள அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.மேலும் அவர் ஆறுதலையும் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள் IBC Tamil
