இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை - சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

N. Lingusamy
By Nandhini Aug 22, 2022 09:29 AM GMT
Report

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழ் சினிமாத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் லிங்குசாமி

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வந்தவர்தான் இயக்குநர் லிங்குசாமி. இவர் கடந்த 2001ம் ஆண்டு ‘ஆனந்தம்’ என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் லிங்குசாமி.

செக் மோசடி 

இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதர சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் செக் மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் பைனான்ஸ் நிறுவனமான பிவிபி செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

N.lingusamy

6 மாதம் சிறைத்தண்டனை

பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் லிங்குசாமிக்கும், அவரது சகோதர சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.