மைசூரில் ஓய்வுபெற்ற உளவுத் துறை அதிகாரி மீது கார் ஏற்றி கொலை - வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்...!

Attempted Murder Viral Video
By Nandhini Nov 07, 2022 11:47 AM GMT
Report

கர்நாடக மாநிலம், மைசூரில் 82 வயதான ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரி மீது மர்ம நபர்கள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற உளவுத் துறை அதிகாரி கொலை

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, சாலையில் ஆர்.என். குல்கர்னி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த முதற்கட்ட விசாரணையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அந்த சிசிடிவி கேமராவில் ஆர்.என். குல்கர்னி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். ஏசிபி தலைமையில் 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

mysuru-cctv-viral-video-murder