ரஷ்யாவில் வேகமாக பரவும் மர்ம வைரஸ்: அரசாங்கம் மறைப்பது ஏன்?
ரஷ்ய நாட்டில் மர்மமான ரத்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதிக வெப்பத்துடன் காய்ச்சல், இருமினால் ரத்தம் வருவது உள்ளிட்ட அறிகுறிகளால் இந்த தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்த வைரஸ் தொற்று பரவி வருவதை அங்குள்ள அதிகாரிகள் மறைத்து வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கடந்த 2020, 2021 வருடங்களில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு பரவி, பலரின் உயிரை காவு வாங்கியது. இதிலிருந்து இன்றும் சில நாடுகள் மீண்டு வரவில்லை. மக்களின் உடல்நலம், பொருளாதாரம் என்ற பல்வேறு வகைகளில் அதன் பாதிப்பு இருக்கிறது.
கொரோனா பரிசோதனை
இந்த நிலையில், ரஷ்யாவில் மற்றொரு கொடிய வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்படி, “அதீத உடல் வெப்பத்துடன் மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கூடவே இருமலும் வருகிறது. அளவுக்கு அதிகமாக இருமும் பொழுது ரத்தம் வருகிறது. குறித்த தொற்று அந்த நாட்டில் மருத்துவ அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மர்ம வைரஸ் பரவும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது “நெகட்டிவ்” என காட்டுகிறது.
இப்படி தொற்று நாட்டுமக்களை தாக்குகிறது என்பதனை அங்குள்ள அதிகாரிகள் மறைக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
"பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்ததில் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. அதனால் இதை அடையாளம் தெரியாத மர்ம வைரஸ் என்று சொல்ல முடியாது." என கூறுகிறார்கள்.
தொற்றின் அறிகுறிகள்
- வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு 39 டிகிரி வெப்பத்தில் காய்ச்சல் அடிக்கிறது.
- இருமும் போது ரத்தம் வெளிப்படுகிறது.
- சுவாச குழாயில் பாதிப்பை ஏற்படுகிறது.
- இருமும் பொழுது விலா எலும்பு பயங்கரமாக வலிக்கிறது.
- நிமோனியா போன்ற பாதிப்பு.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்டவையாகும்.
இது குறித்து மருத்துவர்கள் கூறும் பொழுது, “ குறித்த தொற்று மேல் சுவாச குழாயில் பாதிப்பை ஏற்படுத்தி விளைவுகளை மோசமாக்கிறது... அதற்கு அவசியம் மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்...” எனக் கூறியுள்ளார்.
“இருமலினால் விலா எலும்பு பயங்கரமாக வலிக்கிறது. சாப்பிட கூட முடியவில்லை. காய்ச்சல் சுமார் 3 வாரங்களுக்கு மேலாக இருக்கிறது. இருமல் ஒரு மாதமாகியும் விடவில்லை. கொரோனாவை கூட சற்று எளிதாக கடந்துவிட்டோம். இதை அப்படி கடந்து வர முடியவில்லை.." என நோயாளிகள் புலம்புகிறார்கள்.
சுகாதாரத்துறையின் விளக்கம்
சைன்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் வைரஸ்கள் தொடர்பான அரசு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. அவர்கள் தான் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள். தற்போதுவரை புதிய வைரஸ் பரவுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இதை தேவையில்லாமல் பெரிதாக்க வேண்டாம். உறுதிபடுத்தப்படாத எந்தவித தகவலையும் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம். இது மக்கள் மத்தியில் பயத்தை உண்டு பண்ணும். அரசு வெளியிடும் அறிவிப்புகளை சரியாக கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நிபுணர்களின் அச்சம்
ரஷ்யாவில் உள்ள தற்போதைய நிலையை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அங்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலையில் பயங்கர அரசியல் உள்ளது. ரஷ்யாவில் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.