இந்திய அணிக்கு தோனி வேண்டாம் - கங்குலியின் முடிவை மாற்றியது யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்குப் பெற்று தந்தவர். 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல்முறையாக விளையாடினார்.

ஆனால் அவர் இந்திய அணியில் சேர்ப்பதற்கு அப்போதைய கேப்டன் முதலில் தயங்கியதாகவும் பின்னர் தோனி எப்படி இந்திய அணியில் உள்ளே வந்தார் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

அதில், “2003 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை நாங்கள் தேடி வந்தோம். ராகுல் டிராவிட் விக்கட் கீப்பராக இருந்தாலும் நாங்கள் வேறு ஒரு பவர் ஹிட்டிங் விக்கெட் கீபபிங் பேட்ஸ்மேன் ஒருவரை தேடி தேடி வந்தோம்.

கங்குலி தீப் தாஸ்குப்தாவை என்பவரை தேர்வு செய்திருந்தார். ஆனால் நாங்கள் ஒரு சிலர் சேர்ந்து மகேந்திர சிங் தோனி பெயரை முன் எடுத்து வைத்தோம். முதலில் சவுரவ் கங்குலி சம்மதிக்கவில்லை. நாங்கள் அனைவரும் சேர்ந்து மகேந்திர சிங் தோனியின் பெயரை கூறியதற்கு ஒரு மிகப் பெரிய கதை உண்டு.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த தோனி ஒரு போட்டியில் மொத்தம் 170 ரன்களில் மகேந்திர சிங் தோனி ஒற்றை ஆளாக நின்று 130 ரன்களை விளாசினார். எனவே அவர் இந்திய அணியில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். நாங்கள் அனைவருமாக சேர்ந்து பத்து நாட்களுக்கு மேல் கங்குலி அவர்களையும் இந்திய அணித் தேர்வு கமிட்டி உறுப்பினர்களையும் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தோம்” என்றுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்