ஆப்பிரிக்காவில் பரவும் மர்ம நோய்.. ரத்த வாந்தி எடுத்து 53 பேர் பலி -மக்கள் அச்சம்!
ஆப்பிரிக்காவின் காங்கோவில் பரவும் மர்ம நோயால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்காவில் உள்ள நிலப்பரப்பின் அடிப்படையில் 2வது மிகப்பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.குறிப்பாக ஈக்வேட்டூ மாகாணத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையொட்டி சிறப்பு மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பால் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர்.இவர்களில் பலர் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த காய்ச்சல் எபோலா, டெங்கு, மார்பர்க் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களுடன் பாதிப்பை போன்றே இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற இரத்தபோக்கு ஆகிய அறிகுறிகள் தென்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மர்ம நோய்
மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ரத்த மாதிரிகளை சேகரித்து பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்த இருக்கின்றனர் இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது:
ஜூனோடிக் நோய்கள் எனப்படும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் ஆகும். கடந்த ஆண்டுகளில் 60% அதிகரித்துள்ளது. இது மக்களைக் காட்டு விலங்குகள் மற்றும் அவற்றின் நோய்க்கிருமிகளுடன் நெருங்கிய தொடர்புக்குக் கொண்டு வருகிறது.
மேலும் இது எபோலா, எச்ஐவி மற்றும் SARSபோன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் காங்கோ நாட்டில் காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.