29 பேருடன் மறைந்த விமானம்..! 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு..! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
ஏஎன் 32 என்ற விமானம் வங்காள விரிகுடாவிற்கு மேல் பறந்த போது, திடீரென மாயமானது குறிப்பிடத்தக்கது.
மாயமான விமானம்
கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற ஏஎன் 32 விமானம் புறப்பட்டது. இதில், தூத்துக்குடி வீரர் உள்பட 29 பேர் பயணித்துள்ளனர்.
வங்காள விரிகுடா மீது பயணித்த போது, இந்த விமானம் திடீரென மயமாகியுள்ளது. ரேடாரில் இருந்து சட்டென மறைந்த போன இந்த விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அப்போதே அறிவிக்கப்பட்டது.
கண்டுபிடிப்பு
இதனை தொடர்ந்து, 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, தற்போது மாயமான இந்த ஏஎன் 32 குறித்து தகவல்களை மதிய அரசு வெளியிட்டுள்ளது.
சென்னைக்கு அருகே கடற்பகுதிக்குள் 310 கி.மீ. தொலைவில், 3.40 கி.மீ. ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், திடீரென ஏற்பட்ட இந்த விமானம் விபத்தின் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
விமானம் கடலில் எப்படி விழுந்தது? விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்ன? போன்ற தகவல்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.