பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் போலீசார் விசாரணை
Tamil Nadu Police
By Thahir
தென்காசியில் அருகே பாஜக கொடிக்கு மர்ம நபர் தீ வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லப்பிள்ளையார்குளம் பேருந்து நிறுத்தத்தில் திமுக, அதிமுக, பாஜக என பல அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன.
இந்த நிலையில் மர்ம நபர்கள் பாஜக கொடிக்கம்பத்தில் இருந்து கொடியை கீழே இறக்கி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே கிராமத்தில் இதற்கு முன் மது போதையில் இருவர் பாஜகவின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நிலையில் தற்போது கொடிக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.