கர்நாடகாவில் ஓடும் ஆட்டோவில் வெடித்த மர்ம பொருள் - பயங்கரவாத தாக்குதலா? போலீசார் விசாரணை

Karnataka
By Thahir Nov 20, 2022 05:22 AM GMT
Report

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது.

பயங்கரவாத தாக்குதலா?

சிறிது நேரத்தில் ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மங்களூரு வென்லாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கர்நாடகாவில் ஓடும் ஆட்டோவில் வெடித்த மர்ம பொருள் - பயங்கரவாத தாக்குதலா? போலீசார் விசாரணை | Mysterious Object Exploded In A Moving Auto

இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மாநில டிஜிபி குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல, ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாத செயல். இது குறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய ஏஜென்சிகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.