இந்தியாவில் மீண்டும் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம உலோகத்தூண்
india
Mumbai
metel
pillar
By Jon
மும்பையில் உள்ள ஜோகரஸ் பூங்காவில் இரண்டாவது மர்ம உலோகத்தூண் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனோலித் என்று அழைக்கப்படும் மர்ம உலோகத்தூண் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த உலோகத்தூண் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
இந்தியாவில் முத்த முறையாக இந்த உலோகத்தூண் குஜராத் மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் மதம் தோன்றியது. அதன் பிறகு தற்போது மும்பையில் உள்ள ஜோகரஸ் பூங்காவில் இந்த உலோகத்தூண் தோன்றியுள்ளது. இந்த உலோகத்தூண் புகைப்படத்தை மாநகராட்சி ஊழியர் ஒருவர் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார்.
தற்போது வரையில் அமெரிக்கா உளப்பட 30 நாடுகளில் இது போன்ற உலோகத்தூண் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.