மர்மமான முறையில் உயிரிழந்த 17 பேர்.. பீதியில் உறைந்த கிராம மக்கள் - பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள பாதல் என்ற கிராமத்தில் வசிக்கும் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் அடுத்தடுத்து 17 பேர் உயிரிழந்தனர்.
38 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு அமைச்சகங்களின் 11 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
மர்ம மரணம்
உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டது.பரிசோதனையின் முடிவில், மேலும் அவர்களில் உடல்களில் நச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. வைரஸ் அல்லது பாக்டீரியா பாதிப்பும் இல்லை என்றும் 17 பேர் நோய்த் தொற்று காரணமாக இறக்கவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் இது எந்த வகையான நச்சு என ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதல் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டதாகப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.