மர்மமான முறையில் அடுத்தடுத்து 10 பேர் உயிரிழப்பு: அச்சத்தில் கிராம மக்கள்

Corona Tamil Nadu Virudhunagar
By mohanelango May 06, 2021 01:00 PM GMT
Report

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வார காலத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுகாதாரத் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பெரும்பாலோனோர் விவசாயம் மற்றும் பட்டாசு தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சல்வார்பட்டி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 35 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

[QP445 ]

இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையினர் சல்வார்பட்டி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளித்து தெருக்களை தூய்மைப்படுத்தியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் அந்தப் பகுதி மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.