பாஜக எம்.பி மர்ம மரணம்: தற்கொலையா என போலீஸ் விசாரணை.!
ஹிமாச்சலப் பிரதேசம் மண்டியைச் சேர்ந்த பாஜக எம்.பி ராம் ஸ்வரூப் சர்மா தன்னுடைய டெல்லி இல்லத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனையறிந்த அவருடைய பணியாளர்கள் டெல்லி காவல்துறையை அழைத்துள்ளனர். அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ராம் சர்மா.
இது தற்கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எம்.பியின் தற்கொலை செய்தி டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாத்ரா நாகர் ஹாவெளி சுயேட்சை எம்.பி மும்பையில் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதற்கு தாத்ரா நாகர் ஹாவெளியின் மத்திய அரசு நிர்வாகி தான் காரணம் என தன்னுடைய தற்கொலை கடிதத்தில் கூறியிருந்தார்.
தற்போது மேலும் ஒரு எம்.பி தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.