“குல்லா ஒரு கேடா”…சென்னையில் மதரசா சென்று திரும்பிய முஸ்லிம் சிறுவன் மீது மர்ம நபர் தாக்குதல்
Chennai
By Thahir
சென்னையில் மதரசாவிற்கு சென்று திரும்பிய முஸ்லிம் மாணவன் மீது 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் தாக்கிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன் மீது தாக்குதல்
சென்னை அசோக் நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட, ரங்கராஜபுரத்தில் உள்ள மதரசாவுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த 8ஆம் வகுப்பு மாணவனை வழிமறித்த 40 வயதுள்ள மர்ம நபர் ஒருவர் “குல்லா ஒரு கேடா” என்று கூறி அந்த சிறுவனை தாக்கத் தொடங்கியுள்ளார்.
மாணவன் கூச்சலிடவே கூட்டம் கூட தொடங்கியதை கண்ட அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மர்ம நபர் தாக்கியதில் ஆடைகள் கிழிந்த நிலையில், சிறுவன் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.