சினிமாவை விட்டு விலகும் ரஜினி, இதுதான் கடைசி படமா? - ரசிகர்கள் அதிர்ச்சி!

Rajinikanth Lokesh Kanagaraj Mysskin
By Vinothini May 18, 2023 07:09 AM GMT
Report

 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா கெரியரை முடித்து கொள்ளப்போவதாகவும் அவரது கடைசி படம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த், தற்போது அவருக்கு 72 வயது ஆகியும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து ஹிட் குடுத்து வருகிறார்.

mysskin-speeks-about-rajinikanth-last-movie

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எத்தனை நடிகர்கள் ஹிட் குடுத்து பிரபலம் ஆகி வந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனி மதிப்பும் இடமும் உள்ளது.

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்.

இதன் பின்னர் இவர் தனது 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கடைசி படம்

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் தான் இவரது கடைசி படமாக அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

mysskin-speeks-about-rajinikanth-last-movie

இதனை இயக்குனர் மிஷ்கின் அவரது பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், லோகேஷ் கனகராஜ் பற்றி பேசுகையில், “அவன் இந்திய அளவில் பெரிய லெவலில் வந்துகொண்டிருக்கிறான்.

அடுத்ததா ரஜினி சாரை வச்சு படம் பண்ணப்போறான்.

அது மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம். அது ரஜினியோட கடைசி படம்னு சொல்றாங்க” என கூறி உள்ளார். இதனால் ரஜினியின் கடைசி படம் என்பது உறுதியாகியுள்ளது, இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.