"ஜேம்ஸ் பாண்ட்டாக விஜய்யை நடிக்கவைப்பேன்" - பிரபல இயக்குநர் தகவல்
என்னுடைய படத்தில் விஜய்யை ‘ஜேம்ஸ் பாண்ட்’ கதாபாத்திரத்தில்தான் நடிக்க வைப்பேன் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
இந்தியாவில் சமீபகாலமாக க்ளப் ஹவுஸ் மற்றும் ட்விட்டர் ஸ்பேஸ் தளங்கள் பிரபலமடைந்துள்ளதால் சினிமாத்துறையினர், இதனை பெரிதும் பயன்படுத்தி ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். 'ஜகமே தந்திரம்’, ‘மாநாடு’ படக்குழுவினர், விஜய் பிறந்தநாளையொட்டி லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் அதில் உரையாடினார்கள்.

அந்த வகையில் இயக்குநர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடினார்.அப்போது, ரசிகர் ஒருவர் உங்களது இயக்கத்தில் விஜய் நடித்தால், எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில்தான் நடிக்க வைப்பேன் என்று மிஷ்கின் பதிலளித்தார்.
அதேபோல் மேலும் ஒரு ரசிகர், 'பிசாசு 2’ படத்தில் ஆன்ட்ரியாவின் நடிப்பு எப்படி? என்று கேட்டதற்கு, அந்த படத்திற்காக நடிகை ஆன்ட்ரியா தேசிய விருதை வாங்குவார் என்றார்.