சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து - விஜய்யும் பெரிய ஆள் தான் - மிஷ்கின் சப்போர்ட்
ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் ரஜினி கூறிய குட்டி ஸ்டோரி விஜயை மறைமுகமாக விமர்சிப்பதாக அமைத்துள்ளது என கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில் அது குறித்து இயக்குனர் மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது யார் சூப்பர்ஸ்டார் என்ற விவாதம் எழுந்துள்ளது. பட வசூலிலும், சம்பள அளவிலும் ரஜினியை விஜய் முந்திவிட்டார் என்கிற காரணத்தால் தற்போது இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த விவாதங்களை ஜெயிலர் படத்தின் பாடல் மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் நடிகர் ரஜினி கூறிய குட்டி ஸ்டோரி வேறு பல விவாதங்களையும் எழ வைத்தது.
ரஜினியின் கழுகு காக்கா கதை
கழுகு, காக்கா கதை ரஜினி கூற அது சோசியல் மீடியாவில் மிக பெரிய அளவில் வைரலானது. பலரும் அது குறித்து கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் மிஷ்கினும் தன்னுடைய கருத்தை இந்த விவகாரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஜினியின் பேச்சை தான் கேட்கவில்லை என குறிப்பிட்ட மிஷ்கின், ஆனால் அவர் கண்டிப்பாக யாரையும் குறிப்பிட்டு சொல்லியிருக்க மாட்டார் என தெரிவித்தார்.
மிஷ்கின் கருத்து
அதேபோல விஜய்யும் சாதாரண ஆள் கிடையாது. அவரும் பெரிய ஆள்தான் என்றும், விஜய்யை ரஜினிக்கே மிகவும் பிடிக்கும் என்றும் மிஷ்கின் தெரிவித்தார். ரசிகர்கள் ரஜினியின் பேச்சை வைத்து சண்டை போட்டுக்கொள்ள கூடாது. இது ஒரு குடும்பம் மாதிரி. ரஜினி மூத்தவர், விஜய் இளையவர். அப்படிதான் நாம் இதை பார்க்கவேண்டுமே ஒழிய, வெளியில் இருப்பவர்கள் இதை வைத்து சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது” எனக் கூறியுள்ளார்.