அசிங்கமா பேசினாங்க; சீரியலை விட்டு விலகியது அதனால்தான்.. ரகசியம் உடைத்த மைனா நந்தினி
சீரியல்களில் நடிக்காமல் இருப்பது குறித்து மைனா நந்தினி தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
மைனா நந்தினி
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நந்தினி. அதிலிருந்தே மைனாவாக அறியப்பட்டார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொண்டார்.
அதன்பின் நந்தினியை சீரியல்களில் பார்க்க முடிவது இல்லை. படங்களில் மட்டுமே நடிக்கிறார். தற்போது சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள மைனா,
”தன்னுடைய ஷார்ட் பிலிம்களின் விதவை என்று எபிசோடில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். ஏன் என்றால் என்னுடைய வாழ்க்கையில் அந்த ஒரு தருணத்தை நான் கடந்து வந்தேன். இந்த நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று சொல்கிற மாதிரிதான் நான் என்னுடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றது.
சீரியல் வாய்ப்பு
விதவை எபிசோடில் என்னிடம் அந்த அம்மா உனக்கு இப்போ வேற ஆம்பளையே கிடைக்கலையா? என் பையன் தான் உனக்கு கிடைச்சானா? என் பையனையும் கொல்ல போறியா? என்று கேட்பார். அந்த வார்த்தையை கேட்டதும் என்னை அறியாமலேயே நான் கதறி அழுதுவிட்டேன்.
நான் 15 வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்து பட்ட வலியும் வேதனையும் எனக்கு மட்டும்தான் தெரியும். அதே பிரச்சனை இப்போதும் பலருக்கும் நடந்து கொண்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார். மேலும், நான் சீரியலை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவு செய்தது கிடையாது.
ஆனால் சில வருடங்களாக எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பதால் இனி சீரியலில் நடிக்கமாட்டேன் என்று நினைத்து விட்டனர். ஆனால், நான் பார்க்கும் அனைத்து இயக்குநரிடமும், தயாரிப்பாளரிடமும் எனக்கு வேலை தருமாறு கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.