பிரசவ காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மைனா - இணையத்தில் வைரல்

pregnant Myna Nandhini photo viral Yogeshwaran
By Anupriyamkumaresan Oct 29, 2021 01:14 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியலிலும் காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் மைனா நந்தினிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் அவர் கர்ப்பமாக இருப்பது போல் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாக்ஷி தொடர் மூலமாக அறிமுகமானவர் மைனா நந்தினி. அவருக்கு முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து இரண்டாவதாக லோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் சிறந்த ஜோடியாக வலம் வரும் அவர்கள் தற்போது Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பிரசவ காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மைனா - இணையத்தில் வைரல் | Myna Nandini Pregnant Photo Viral

இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான். சமீபத்தில் அவரது மகன் முதல் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அதில் பல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் தனது கணவருடன் இணைந்து செய்யும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவருமே நண்பர்கள் போலவும் ஜாலியாகத்தான் பழகி கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் சீரியல்களில் நடித்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில் நந்தினி தற்போது கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால் அது பையன் துருவன் 6 மாதம் வயிற்றில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.