ஒரு நொடியில் மொத்தமும் போச்சு - மைனா நந்தினி அதிர்ச்சி வீடியோ
மொத்த பணத்தையும் இழந்து விட்டேன் என மைனா நந்தினி தெரிவித்துள்ளார்.
மைனா நந்தினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணனன் மீனாட்சி சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானவர் நந்தினி. ,அந்த சீரியலில்,மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் மைனா நந்தினி என அழைக்கப்படுகிறார்.
சீரியல்களில் நடித்ததோடு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மைனா நந்தினி.
ஹார்ட்டிஸ்க்
இவர் தற்போது 16 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட மைனா விங்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். மேலும், லவ் ஆக்ஷ்ன் டிராமா என்ற மற்றொரு சேனலை தொடங்கி அதில் குறும்படங்களை வெளியிட்டு வந்தார், புள்ளத்தாச்சி என்ற தொடரை நடித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அந்த தொடருக்காக இலங்கை சென்று 11 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி அந்த காட்சிகளை ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து சென்னை கொண்டு வந்துள்ளார். அந்த ஹார்ட் டிஸ்க் ஒருமுறை தவறுதலாக கீழ் விழுந்துள்ளது. அதன் பின், சிஸ்டத்தில் போட்டு பார்த்தபோது அது வேலை செய்யவில்லையாம்.
தங்களது, உழைப்பு, பணம் மொத்தமாக வீணாகி விட்டது, பேங்க் பேலன்ஸ் ஜீரோ ஆகி விட்டது என மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.