பிரசித்திப் பெற்ற கபாலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை மறைப்பு? - தொடரும் தீவிர விசாரணை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் புராதான மயில் சிலை அங்குள்ள தெப்பக்குளத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று பல கோணங்களில் கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இங்குள்ள புன்னைவன நாதர் சன்னதியிலிருந்த தொன்மை வாய்ந்த மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது. உண்மையான சிலை திருடப்பட்டிருப்பதாக காவல் நிலையத்தில் வந்த புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் அறநிலையத் துறையின் உண்மையை கண்டறியும் குழு தங்களது விசாரணையை 6 வார காலத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து கோயிலின் தெப்பக்குளத்தில் சிலை தேடும் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.