மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு : கிரிக்கெட் மட்டை, கத்தியால் தாக்கி கொலை செய்தது அம்பலம்!

Tamil Nadu Police
By Swetha Subash May 09, 2022 12:47 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-அனுராதா தம்பதி நேற்று முன்தினம் காலை அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு அவரது வீட்டிலேயே அவரது கார் ஓட்டுநரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்டய கணக்காளரான ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவிலேயே குடியேறியதால் வயதான இருவரும் சென்னையில் தனியாக வசதித்து வந்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று அங்கேயே 3 மாதம் தங்கியிருந்து குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் காலத்தை கடத்தி வந்திருக்கின்றனர்.

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு : கிரிக்கெட் மட்டை, கத்தியால் தாக்கி கொலை செய்தது அம்பலம்! | Mylapore Couple Murder Case Autopsy Report

இந்த நிலையில், அமெரிக்கா சென்றிருந்த தம்பதியினர் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30மணிக்கு சென்னை திரும்பினர். காலை 10 மணி கடந்தும் இருவரும் போன் எடுக்காமல் இருந்தததாலும், இருவரது போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படிருந்ததாலும் அமெரிக்காவில் உள்ள மகன் சஸ்வத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வீட்டு வேலைக்காரரான கிருஷ்ணாவைக் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் முரணாக பதிலளித்ததால் தனது நண்பர் ஸ்ரீநாத்துக்கு தகவல் கொடுத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார் சஸ்வத். அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் டிரைவர் உள்பட யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து நேரடியாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு : கிரிக்கெட் மட்டை, கத்தியால் தாக்கி கொலை செய்தது அம்பலம்! | Mylapore Couple Murder Case Autopsy Report

தம்பதி வசித்துவந்த வீட்டிற்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்த்ததில் ஸ்ரீகாந்த்-அனுராதா தம்பதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துரித படுத்தினர். இதற்கிடையே தம்பதி வசித்த வீட்டில் இருந்து காணாமல் போன இன்னோவா கார் ஆந்திராவை நோக்கி செல்வது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆந்திரா போலீசாரின் உதவியுடன் இன்னோவா காரை மடக்கிப் பிடித்து அதில் பயணம் செய்த கிருஷ்ணா மற்றும் ரவி ராயை ஆந்திரா போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினரை கொலை செய்துவிட்டு 8 கிலோ தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்களுடன் தப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதமாக அமெரிக்காவில் இருந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர், கடந்த 3 மாதத்துக்கு முன்பாக ஸ்ரீகாந்த் மட்டும் சென்னை வந்து விட்டு உடனடியாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீகாந்த், மனைவி மற்றும் மகன்களிடம் சமீபத்தில் விற்கப்பட்ட சொத்துகள் தொடர்பாகவும் 40 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பேசி இருக்கிறார்.

இதன் பின்னரே பணத்தை கொள்ளையடிக்க கிருஷ்ணா மற்றும் ரவி ராய் திட்டம் தீட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்.

கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பண்ணை வீட்டில் கொலை செய்த பின் இருவரையும் புதைப்பதற்கான குழியையும் தோண்டி வைத்திருக்கின்றனர்‌ லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராய்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சைதாப்பேட்டை 23-வது பெருநகர குற்றவியல் நீதிபதி கெளதமன் முன்பு நேற்று நள்ளிரவு ஆஜர்படுத்திய மயிலாப்பூர் போலிஸார் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

பண்ணை வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இருவரது உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தம்பதியை கிரிக்கெட் மட்டை, கத்தியால் தாக்கி கொடூரமாக கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.