பிரசித்திப் பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழா - போக்குவரத்து மாற்றம்
மிகவும் பிரசித்திப் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழா ஆண்டுதோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றம் துவங்கியது.
இதனையடுத்து, சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் நந்தி சேவை நடைபெற்றது. அதிகார நந்தி வாகனத்தில் கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் சர்வ அலங்காரத்தில் 4 மாடவீதிகளில் வீதி உலா வந்தார்.
இந்நிலையில், வரும் 15ம் தேதி பங்குனிப் பெருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சென்னை சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் பலர் கலந்து கொள்வார்கள்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.