இத்தனை முன்னணி நடிகர்களுக்கு மயில் சாமி டப்பிங் பேசியுள்ளாரா...? - ரசிகர்கள் ஆச்சரியம்...!
முன்னணி நடிகருக்கு மயில் சாமி டப்பிங் பேசிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உயிரிழப்பு
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. சமீபத்தில் நடந்த சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.
கோயிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் அதிகாலைக்கு இல்லம் திரும்பிய மயில்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினரும், ரசிகர்களும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்களுக்கு பின்னணி குரலாக இருந்த மயில்சாமி
1992ம் ஆண்டு இயக்குனர் ஜே.பி.ராஜா ரவி இயக்கிய ‘கஸ்தூரி மஞ்சள்’ என்ற திரைப்படத்தில் ”வடிவேலுக்கு” பின்னணி பேசியுள்ளார் மயில்சாமி.
இனையடுத்து, 1996ம் ஆண்டு இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ”செல்வா” என்ற திரைப்படத்தில் ‘மணிவண்ணனுக்கு’ பின்னணி குரல் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரே படத்தில் இரு நடிகர்களுக்கு அதுவும் இரு நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகளிலும் டப்பிங் பேசி அசத்தியிருக்கிறார்.
2004ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வெளியான ‘நியூ’ என்ற படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் வரும் ‘பிரம்மானந்தம்’ மற்றும் ‘அலி’ என 2 தெலுங்கு நடிகர்கள் நடித்தார்கள்.
அந்த 2 நடிகர்களுக்கும் டப்பிங் பேசியது மயில்சாமி தான். அது மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காம்பினேஷன் காட்சிகளிலும் மயில்சாமி ஒருவரே இருவருக்கும் குரல் கொடுத்துள்ளார்.